குழந்தைகளிடமும் மிக பிரபலமானார் முதல்வர் பழனிச்சாமி! | AIADMK | Edappadi Palaniswami | TN Govt

Baby Video About Edappadi Palanisamy : தமிழக அரசியலில் முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்ற எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தொடர்ந்து நல்ல முறையில் ஆட்சி செய்து வருகிறார்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரிடமும் தனக்கென ஒரு நற் பெயரை பெற்றுக் கொண்டுள்ளார். செமஸ்டர் தேர்வு ரத்து செய்ததன் மூலம் இவர் மாணவர்களின் ஹீரோவாக மாறினார்.

Baby Video About Edappadi Palanisamy

இந்த நிலையில் தற்போது குழந்தைகளின் ஃபேவரிட் அரசியல் தலைவராகவும் மாறியுள்ளார். ஆம் குழந்தை ஒன்று பழனிச்சாமி தாத்தா என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களை போனில் பார்த்துப் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் செம்ம வைரலாகி வருகிறது.

இதன் மூலம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குழந்தைகள் மனதிலும் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது.

அதேபோல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அதிமுக அலுவலகத்தில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.