Azeem Wildcard Entry in Bigg Boss4

பிக் பாஸ் வீட்டிற்கு செல்ல இருந்த இறுதி நேரத்தில் அஸூம் தனிமைப்படுத்துதலில் இருந்து வெளியேறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Azeem Wildcard Entry in Bigg Boss4 : உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் 54 நாட்களை நெருங்கி உள்ளது.

இதுவரை அர்ச்சனா சுசித்ரா என இருவர் வயல்காடு என்ட்ரி ஆக உள்ளே அனுப்பப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக விஜய் டிவி சீரியல்களில் சிவானியுடன் ஜோடி போட்டு நடித்த அஸூம் உள்ளே செல்ல இருப்பதாக தகவல் வெளியானது.

இதற்காக அவர் கிண்டியில் உள்ள பிரபல தனியார் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். இந்த வார சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் வீட்டிற்கு செல்வார் என கூறப்பட்டு வந்தது.

இப்படியான நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவர் ஹோட்டலில் இருந்து வெளியேறியதாகவும் அவரை பிரபல மருத்துவ மனைகளில் சிலர் பார்த்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இதற்கான காரணம் குறித்து பிரபல பத்திரிக்கை ஒன்று ஆராய்ந்த போது அஸூம் அவர்களின் தயாருக்கு உடல்நலக் குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவர் அஸூம் பக்கத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என கூறியுள்ளார்.

இந்த தகவல் அஸூமுக்கு தெரிய வரவே அவர் ஓட்டலில் இருந்து வெளியேறியுள்ளார். தற்போது அவரது தாயார் உடல் நலத்துடன் இருக்கிறார்.

இதனால் திட்டமிட்டபடி அஸூம் இந்த வார சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வார் என தகவல்கள் கிடைத்துள்ளன.