Azeem Reveals Secrets of BB4 Entry

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது ஏன் என விஜய் டிவி அஸூம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Azeem Reveals Secrets of BB4 Entry : சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் 60 நாட்களை நெருங்கி உள்ளது.

பதினெட்டு போட்டியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில் இருந்து இதுவரை ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி, சுசித்ரா மற்றும் சம்யுக்தா என ஐவர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

மேலும் விஜய் டிவி பிரபலமான அஸூம் வழிகாட்டியாக இந்த நிகழ்ச்சியில் செல்லவிருந்த நிலையில் அவரது தாயாருக்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக அவருடைய என்ட்ரி தள்ளிப்போனதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் அஸூம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆமாம் நீங்கள் கேள்விப்பட்டது உண்மைதான். தன் அம்மாவிற்கு உடல்நிலை சரியில்லை என்பதால் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல முடியவில்லை என தெரிவித்துள்ளார்.

வைல்ட் கார்ட் என்ட்ரி இருக்கா என கேட்டதற்கு இருக்கு ஆனால் இப்போது என என்னால் கூறமுடியாது எனவும் தெரிவித்துள்ளார். எனவே அஸூம் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பது மட்டும் உண்மை என்பது உறுதியாகி உள்ளது.