Azeem Entry Delayed Secrets

சிவானியை காப்பாற்றவே பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருந்த அஸூமின் என்ட்ரி தள்ளிப்போய் வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Azeem Entry Delayed Secrets : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் வழக்கம்போல 17 போட்டியாளர்களுடன் தொடங்கியது.

ஆனால் நிகழ்ச்சியில் பெரிய அளவிற்கு சுவாரசியம் இல்லை என்பதால் ஜீ தமிழ் அர்ச்சனா உள்ளே அனுப்பப்பட்டார். அவரைத் தொடர்ந்து சில வாரங்களிலேயே சுசித்ரா உள்ளே சென்றார்.

இவர்களைத் தொடர்ந்து நடிக்க அஸூம் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்ல இருப்பதாக தகவல் வெளியானது. அதற்காக அவர் ஹோட்டல் ஒன்றில் தனிமைப்படுத்தப்பட்டும் இருந்தார்.

திடீரென அவரது அம்மாவிற்கு உடல்நிலை குறைபாடு ஏற்பட்டதன் காரணமாக தனிமைப்படுத்தலில் இருந்து வெளியேறினார். அதன் பின்னர் அவருடைய அம்மாவின் உடல்நிலை சரியானதால் வீட்டிற்குள் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது வரை அஸூம் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லவில்லை. இது குறித்து பிரபல பத்திரிக்கை ஒன்று விசாரிக்கையில் நேரம் அஸூம் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்க வேண்டும். ஆனால் ஏன் செல்லவில்லை என தெரியவில்லை என கூறியுள்ளனர்.

மேலும் இன்னொரு தரப்பு ஷிவானியின் தரப்பினர் அஸூம் உள்ளே சென்றால் ஷிவானிக்கு பிரச்சனை ஏற்படும் என்பதால் அவர் செல்லவில்லை எனவும் கூறி வருகின்றனர்.