Azeem About His Divorce

விவகாரத்திற்கு ஷிவானி தான் காரணம் என பலரும் கூறி வந்த நிலையில் அசீம் விளக்கம் அளித்துள்ளார்.

Azeem About His Divorce : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமானவர்கள் அசீம் மற்றும் ஷிவானி நாராயணன்.

இந்த சீரியலில் இணைந்து நடித்ததால் இவர்கள் பற்றி நிறைய கிசுகிசுக்கள் வெளியாகின. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட அசீம் செல்ல இருப்பதாக தகவல் வெளியானதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனால் இறுதியில் அவர் உள்ளே செல்லவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் அசீம் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்திருந்தார்.

இதற்கு ஷிவானி தான் காரணம் என பலரும் பேச தொடங்கினர். இது குறித்து தற்போது அசீம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னுடைய திருமண வாழ்க்கை குறித்து யாரும் பேச வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்.

தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் ஷிவானியுடனான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.