atlee

பிகில் திரைப்படத்தில் முக்கிய நடிகர்கள் பலரையும் அப்படத்தின் இயக்குனர் அட்லீ வீணடித்துவிட்டதாக சினிமா ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் மெகா ஸ்டாரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அட்லீ இயக்கியுள்ள இப்படத்தின் முதல் பாதி ஆக்ஷன், செண்டிமெண்ட், எமோஷன் எனவும், பிற்பகுதி கால்பந்து விளையாட்டு என அனைத்திலும் விஜய் பட்டய கிளப்பி இருந்ததாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

ஆனால், ஒரு புறம் முக்கிய நடிகர்கள் இப்படத்தில் அட்லீ வீணடித்து விட்டதாக சமூகவலைத்தளங்களில் சினிமா ரசிகர்கள் குமுறி வருகின்றனர்.

ஆனந்தராஜ், யோகிபாபு, விவேக் என 3 முக்கிய காமெடி நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். எனவே, இப்படத்தில் காமெடி அள்ளும் என சென்ற ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. படத்தில் நகைச்சுவை காட்சிகள் யாருக்கும் சிரிப்பை வரவழைக்க வில்லை.

Bigil

முக்கியமாக நயன்தாரா தற்போது பெண்களுக்கு முக்கியவத்துவம் உள்ள கதைகளில் நடித்து வருகிறார். அவரை இழுத்து வந்து விஜயுடன் இரண்டு டூயட்களை அட்லீ ஆட விட்டுள்ளார். அவருக்கு முக்கிய காட்சிகள் எதுவுமில்லை. ஆனாலும், அவர் நயன்தாரா என்பதால் ஒரே ஒரு எமோஷனல் காட்சியை மட்டும் அவருக்காக வைத்துள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது.

அதன்பின் நடிகர் கதிரும் இப்படத்தில் வீணடிக்கப்பட்டுள்ளார். பரியேறும் பெருமாள் மூலம் சினிமா ரசிகர்களை தன்னை திரும்பி வைக்க வைத்தவர் அவர். ஆனால், இப்படத்தில் அவருக்கு 4 காட்சிகள் மட்டுமே. அதை வேறு ஒரு நடிகரை வைத்தே எடுத்திருக்கலாம். எதற்காக கதிர்? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.