அட்லி ஷாருக்கான் இணயவுள்ள படம் பற்றிய லேட்டஸ்ட் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Atlee and Sharukh Khan Movie Update : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றிய இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

ராஜா ராணி திரைப்படத்தை தொடர்ந்து அட்லி அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கினார். அட்லி இயக்கும் திரைப்படங்கள் என்னதான் இந்த படத்தின் காப்பி, அந்த படத்தின் காப்பி என குற்றச்சாட்டுகள் இருந்தாலும் படம் வசூல் ரீதியாக எப்போதும் வெற்றியை பெற்று விடுகிறது.

தளபதி விஜயை தொடர்ந்து அட்லி அடுத்ததாக பாலிவுட் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுடன் இணைய உள்ளார். இவர் தன்னுடைய டீமுடன் கதை விவாதத்தில் ஈடுபட்ட வீடியோக்கள் வெளியாகியிருந்தது. இந்த பாலத்தில் ஹெலிகாப்டர் ஜேசிங் காட்சிகள் இருப்பது டிஸ்கஷன் வீடியோ மூலமாக தெரிய வந்தது.

அட்லி ஷாருக்கான் படத்தை முடிக்க எப்படியும் இரண்டு வருடங்கள் ஆகும், ஆகையால் அது வரை அவர் தளபதி விஜயுடன் கூட்டணி வைக்க வாய்ப்பு இல்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.