Asuran
சமீப காலமாக திரையுலகை விட்டு காணாமல் போன நடிகை தான் தெலுங்கு அசுரன் ரீமேக்கில் நடிக்க உள்ளாராம்.

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் அசுரன். இப்படத்தை வெற்றிமாறன் இயக்க கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார்.

தற்போது இப்படம் தெலுங்குவில் ரீமேக்காக உள்ளது. தெலுங்குவில் வெங்கடேஷ் தனுஷ் வேடத்தில் நடிக்க உள்ளார். மஞ்சு வாரியர் வேடத்தில் நடிக்க படக்குழு முதலில் ஸ்ரேயாவை அணுகியுள்ளது.

சம்பள பிரச்சனை காரணமாக இப்படத்தில் இருந்து அவர் விலகி கொள்ள இந்த வாய்ப்பு ப்ரியா மணிக்கு சென்றுள்ளது.

திருமணத்திற்கு பின்னர் படங்களில் நடிக்காமல் இருந்த ப்ரியா மணியை ரசிகர்கள் அசுரன் ரீமேக் படத்தில் பார்க்க ஆவலுடன் உள்ளனர்.

அதே சமயம் தரமான பட வாய்ப்பை ஷ்ரேயா நழுவ விட்டது அவரது ரசிகர்களுக்கு வருத்தத்தை கொடுத்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.