Asuran Movie Review : படம் பக்கா.. ஆனால்? | Ausran Review | Asuran FDFS | Dhanush | Manju Warrier | Ken | Ammu Abhirami | Tamil Cinema Movie Review
கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, கென், அம்மு அபிராமி, பிரகாஷ் ராஜ், ஆடுகளம் நரேன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் அசுரன். இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Asuran Movie Review : 

படத்தின் கதைக்களம் :

குடிகார குடும்ப தலைவரான தனுஷிற்கும் மஞ்சு வாரியாருக்கும் முருகன் ( டிஜே), சிதம்பரம் (கென்) மற்றும் ஒரு பெண் என மூன்று குழந்தைகள் உள்ளன.

ஆடுகளம் நரேன் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து ஊரில் உள்ளவர்களின் நிலங்களையெல்லாம் விலைக்கு வாங்கி சிமெண்ட் பேக்டரி கட்ட திட்டம் போடுகின்றனர். ஆனால் தனுஷ் குடும்பம் அதற்கு சம்மதிக்காததால் இரண்டு குடும்பத்திற்கும் தகராறு ஏற்படுகிறது.

அசுரன் படத்திற்கு ஆஸ்கர் விருது நிச்சயம் – சொன்னது யார் தெரியுமா .?

இந்த தகராறால் தனுஷின் மூத்த மகன் முருகனை கொன்று விடுகின்றனர். இதனால் தனுஷின் இரண்டாம் மகன் கென் ஆடுகளம் நரேனை கொன்று விடுகிறார். அதன் பிறகு நரேனின் குடும்பம் தனுஷையும் கென்னையும் பழி வாங்க திட்டமிடுகின்றனர்.

இவர்களிடம் இருந்து தனுஷின் குடும்பம் எப்படி தப்பிக்கிறது? இறுதியில் என்னவானது என்பது தான் இப்படத்தின் மீதி கதை.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி, கென். டி.ஜே, அம்மு அபிராமி என படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரும் அந்தந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர். படத்தில் நடித்துள்ள அனைவருக்குமே சிறந்த நடிகர் நடிகர்களுக்காக விருது கொடுக்கலாம்.

தொழில் நுட்பம் :

இசை :

ஜி. வி பிரகாஷின் இசை படத்திற்கு மிக பெரிய பலம். இடத்திற்கு தகுந்தாற் போல இசையை மாற்றி முழு படத்திற்கும் உயிர் கொடுத்துள்ளார்.

ஒளிப்பதிவு :

வேல்ராஜின் ஒளிப்பதிவை நிச்சயம் பாராட்டியே ஆக வேண்டும். ஒவ்வொரு காட்சியையும் மிகவும் தெளிவாக படம் பிடித்துள்ளார்.

எடிட்டிங் :

ஆர். ராமரின் எடிட்டிங் படத்தை மேலும் மெருகேற்றியுள்ளது.

இயக்கம் :

வெற்றிமாறனின் திரைக்கதை மிக சிறப்பு.. படத்தின் கதையை இரண்டு விதமாக பிரித்து காண்பித்தது சிறப்பு. ஆக்ஷன், எமோஷன், செண்டிமெண்ட் என அனைத்தையும் சேர்த்து அற்புதமாக கொடுத்துள்ளார். ஒவ்வொருவரிடம் இருந்தும் சிறப்பாக நடிப்பை வெளிப்படுத்த வைத்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. ஒட்டு மொத்த நடிகர் நடிகைகளின் நடிப்பு
2. இசை
3. கதைக்களம்
4. வெற்றிமாறனின் இயக்கம்
5. ஒளிப்பதிவு

தம்ப்ஸ் டவுன் :

1. முதல் பாதியில் மட்டும் கொஞ்சம் திரைக்கதை வேகத்தை கூட்டி இருக்கலாம்.

YouTube video

REVIEW OVERVIEW
அசுரன் விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
asuran-movie-reviewமொத்தத்தில் அசுரன் சொந்த மண்ணுக்காக போராடும் ஒரு யுத்தம்