Gypsy Movie Review
ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி உள்ள திரைப்படம் ஜிப்ஸி. இந்த படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Gypsy Movie Review : 

படத்தின் கதைக்களம் :

தாய், தந்தையை இழந்து தனிமையில் தவிக்கும் ஜீவாவை குதிரைக்காரர் ஒருவர் அழைத்து சென்று வளர்க்கிறார். நாடோடியாக இவர்கள் ஊர் ஊராக சுற்றி திரிகின்றனர்.

இப்படியான நிலையில் ஜீவாவை வளர்க்கும் குதிரைக்காரர் அவரிடம் ஒரு விசயத்தை கூறி விட்டு இறந்து விடுகிறார். அதன் பின்னர் ஜீவாவும் அந்த குதிரையும் மட்டுமே சுற்றி திரிகின்றன.

இந்நிலையில் ஜீவா முஸ்லீம் பெண்ணான நாயகி நடாஷா பார்க்கிறார், பழகுகிறார், காதலிக்கிறார். நடாஷா வீட்டில் அவருக்கு திருமணம் செய்ய பேச்சு எடுக்க இருவரும் வேறொரு ஊருக்கு சென்று குடியேறுகின்றனர். நடாஷா கர்ப்பமும் ஆகிறார்.

ஸ்ரீ திவ்யா தங்கச்சியாக இது? அவர் கொடுத்த கவர்ச்சி போஸை பார்த்தீங்களா?

அங்கு ஜீவாவின் குதிரை, அவரது உதவியாளர் ஆகியோர் கொலை செய்யப்படுகின்றனர். ஜீவாவையும் போலீசார் கைது செய்கின்றனர்.

அதன் பின்னர் என்ன நடந்தது? நாயகி என்னாவானார்?? ஜீவா என்னவானார் என்பது தான் இப்படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

ஜீவாவும், நடாஷாவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

அனைவரும் எதிர்பார்த்தபடியே ஜீவாவின் திரைப்பயணத்தில் இப்படம் முக்கிய மைல் கல்லாக இருக்கும்.

நாயகி நடாஷா அதிகம் பேசவில்லை என்றாலும் தன்னுடைய பார்வையாலே உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.

தொழில்நுட்பம் :

இசை :

சந்தோஷ் நாராயணனின் இசை படத்திற்கு பெரிய பலம்.

ஒளிப்பதிவு :

செல்வகுமாரின் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாகவும் தெளிவாகவும் படமாக்கியுள்ளது.

எடிட்டிங் :

Raymond Derrick Crasta-ன் எடிட்டிங் இரண்டாம் பாதியில் இன்னும் கொஞ்சம் கத்தரி போட்டிருக்கலாம். ஒரு சில காட்சிகள் சுற்றிய இடத்திற்கே திரும்ப வருவது போல தெரிகிறது.

இயக்கம் :

ஜோக்கர் என்ற தேசிய விருது பெற்ற படத்தின் மூலமாக ஜாதி மதத்தை அடிப்படையாக வைத்து அரசியல் செய்பவர்களை தோலுருத்தி காட்டியதை போல இந்த படத்திலும் நல்லவொரு கருத்தை கையில் எடுத்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. ஜீவா, நடாஷாவின் நடிப்பு
2. பாடல்கள், இசை

தம்ப்ஸ் டவுன் :

1. இரண்டாம் பாதியில் சுற்றிய இடத்திற்கே திரும்ப வருவது போன்ற காட்சிகள் உச்சி கொட்ட வைக்கிறது.
2. வழக்கமான லாஜிக்கல் தவறுகள் / லாஜிக் மீறல்கள்

மொத்தத்தில் ஜிப்ஸி ஜீவாவுக்கு ஒரு சிறந்த படம்.

REVIEW OVERVIEW
ஜிப்ஸீ திரை விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
asuraguru-movie-review மொத்தத்தில் ஜிப்ஸி ஜீவாவுக்கு ஒரு சிறந்த படம்.