Asura Guru Thakida Thakida Video Song
அசுரகுரு படத்தின் பாடல் வீடியோ ஒன்று வெளியாகி இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

Asura Guru Thakida Thakida Video Song : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் விக்ரம் பிரபு. இவரது நடிப்பில் ராஜ்தீப் இயக்கத்தில் JSB பிலிம்ஸ் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அசுரகுரு.

வெகுவிரைவில் திரைக்கு வர உள்ள இந்த படத்தில் இருந்து பாடல் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இப்பாடலில் கொரியர் பாயாக வரும் விக்ரம் பிரபு இலங்கை அகதிகள் முகாமிற்கு செல்கிறார்.

பார்ப்பதற்கு அப்படியே சூர்யா போலவே இருக்கும் இளைஞர் – இணையத்தில் வைரலாகும் ஷாக்கிங் வீடியோ!

வானம் அது வீழ்வதில்லை, வீரம் அது தலை சாய்வதில்லை, கோழை உயிர் வாழ்வதில்லை என்று உணர்ச்சிகரமான வரிகளை கொண்ட பாடல் தொடங்குகிறது. விக்ரம் பிரபுவிற்கு பின்னர் சா. ஜே. வே. செல்வநாயகம் அவர்களின் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

சா. ஜே. வே. செல்வநாயகம் என்பவர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியின் உப தலைவராக இருந்தவர்.

அதன் பின்னர் இவர் தமிழரசுக் கட்சியை உருவாக்கி இலங்கையில் கூட்டாட்சி நடைபெற வேண்டும் என வலியுறுத்தி வந்தவர்.

இலங்கை தமிழ் மக்களுக்காக குரல் கொடுத்து வந்தவர். இவரின் புகைப்படம் இப்பாடலில் இடம் பெற்றிருப்பதால் இப்படம் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

YouTube video

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.