குக் வித் கோமாளி அஸ்வினுடன் சாண்டி மகள் லாலா எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ashwin With Sandy Daughter : தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர்களில் ஒருவராக வலம் வருபவர் சாண்டி. கலா மாஸ்டரின் சிஷ்யனான இவர் விஜய் டிவியின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார். பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது சாண்டியுடன் சேர்ந்து அவருடைய மகள் லாலாவும் பிரபலமானார்.

குட்டி குழந்தையாக இருந்த லாலா தற்போது நன்கு வளர்ந்து அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். குக் வித் கோமாளி அஸ்வின் லாலாவுடன் எடுத்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.