Vijay TV and Zee Tamil

விஜய் டிவி பிரபலத்தை வைத்து ஜீ தமிழ் சேனல் வெளியிட்ட விளம்பரத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.

Ashwin in Zee Tamil Ad : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் இந்த வாரத்தோடு நிறைவுக்கு வர உள்ளது.

இந்த நிகழ்ச்சியில் குக்காக பங்கேற்று வருபவர்களில் ஒருவர் அஸ்வின். இந்த நிகழ்ச்சியை டைட்டில் வின்னர் கனி எனவும் ஷகிலா மற்றும் அஸ்வின் ஆகியோர் ரன்னர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்படியான நிலையில் தற்போது அஸ்வின் ஜீ தமிழ் சேனல் விளம்பரம் நடித்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர் ஜூ திரை சேனலில் ஒளிபரப்பாக உள்ள சீரியல் ஒன்றிலும் ஹீரோவாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஸ்வினுக்கு அதிகமான பெண்களின் ரசிகர் பட்டாளம் உள்ளது என்பதால் ஜீ தமிழ் சேனல் அவர் கேட்டதை விட அதிக தொகை கொடுத்து அவரை இழுத்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.