Ashwin

ராஜா ராணி சீரியல் நடிகர் அஸ்வின் நடித்துள்ள வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Ashwin in Raja Rani Serial : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி இரண்டாவது சீசன் கடந்த வாரத்தோடு முடிவுக்கு வந்தது. இதில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் அஸ்வின்.

இந்த நிகழ்ச்சி மூலமாக இவருக்கு எக்கச்சக்கமான பெண் ரசிகைகள் பட்டாளம் இருந்து வருகிறது. மேலும் இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி என்ற சீரியலில் நடித்தார். ஆனால் இந்த சீரியலுக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை மொத்தம் 100 எபிசோடு தான் ஒளிபரப்பானது.

அதுமட்டுமல்லாமல் இவர் நான் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் நடித்துள்ளார். இது ராஜா ராணி சீரியலின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அஸ்வின் நடித்துள்ள வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.