விஜய் டிவியில் சூப்பர் ஹிட் சீரியலில் நடிகர் அஸ்வின் இணைந்து நடித்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Ashwin in Office Serial : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் அஸ்வின். ஆல்பம் பாடல்களில் நடித்து வந்த இவர் இந்த நிகழ்ச்சி மூலமாத்தான் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அறிமுகத்தை பெற்றார்.

ஆனால் இவர் இதற்கு முன்னதாகவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி, நினைக்கத் தெரிந்த மனமே உள்ளிட்ட சீரியலில் நடித்து இருந்தார் என்பதை ஏற்கனவே நாம் அறிவோம். இந்த நிலையில் தற்போது இவர் இன்னொரு சீரியலில் நடித்திருந்த புகைப்படம் வெளியாகி உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த ஆபீஸ் என்ற சீரியலில் நடித்துள்ளார். அதுவும் ஈரமான ரோஜாவே படத்தின் நாயகி பவித்ராவுடன் இணைந்து நடித்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.