Ashwin Emotional Comment About CWC

குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்து அஸ்வின் எமோஷனலாக பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Ashwin Emotional Comment About CWC : தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் இரண்டாவது சீசன் வரும் ஏப்ரல் 14ம் தேதி தமிழ்ப் புத்தாண்டுடன் நிறைவடைய உள்ளது.

முதல் சீசனை காட்டிலும் 2வது சீசனுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அனைவருக்கும் மக்கள் மத்தியில் நல்ல இடம் கிடைத்துள்ளது.

இந்த நிகழ்ச்சி இரண்டாவது சீசன் ஷூட்டிங் முடிவடைந்த பின்பு போட்டியாளர்களாக கலந்து கண்டவர்கள் நிகழ்ச்சி குறித்து தங்களது கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் அஸ்வின் குக் வித் கோமாளி அல்ல எனக்கு எப்போதும் குக் வித் ஃபேமிலி தான். இந்த நிகழ்ச்சியை ரொம்ப மிஸ் செய்வேன். அனைத்து போட்டியாளர்களை பற்றியும் பெருமையாக பேசி உள்ளார். மேலும் தன்னுடன் அதிகமுறை ஜோடி சேர்ந்த சிவாங்கிக்கு அவர் ஸ்பெஷல் நன்றியையும் தெரிவித்துள்ளார். இவர் வெளியிட்டுள்ள பதிவு சமூக வலைதள பக்கங்களில் தீயாக பரவி வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.