ashrida
பிரபல நடிகை அஷ்ரிதா கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவை திருமணம் செய்ய உள்ளதாக செய்திகள் கசிந்துள்ளது.

Ashrida shetty getting married manish pandey – இந்தியாவை பொறுத்தவரை நடிகைகள் பலர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது காதல் கொள்வது அடிக்கடி நடக்கும் நிகழ்வாக பார்க்க முடிகிறது. ஆனால், அதில் சில காதல்களே திருமணத்தில் முடிகிறது. பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மா விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், நடிகை அஷ்ரிதா ஷெட்டி கிரிக்கெட் வீரர் மனிஷ் பாண்டேவை காதலிபதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அஷ்ரிதா ஷெட்டி தமிழில் சித்தார்த்துடன் உதயம் என்.ஹெச்.4, அருள்நிதியுடன் ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’, கவுதம் கார்த்திக்குடன் ‘இந்திரஜித்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவருக்கும் மனிஷ் பாண்டேவுக்கும் இடையே சில வருடங்களுக்கு முன்பு நட்பு ஏற்பட்டது. அதன்பின் அது காதலாக மாறியது. தற்போது திருமண ஏற்பாடுகள் நடந்து வருவதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த மாதம் மும்பையில் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளதாக கூறப்படுகிறது.