Arya Injured in Enemy Movie Shooting

டூப் இல்லாமல் சண்டை காட்சியில் ஆர்யா மற்றும் விஷால் நடித்த இடையில் ஏற்பட்ட சிறு விபத்தில் ஆர்யாவிற்கு காயம் ஏற்பட்டுள்ளது.

Arya Injured in Enemy Movie Shooting : விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகும் எனிமி படத்தின் படப்பிடிப்பு தற்போது EVP பிலிம்ஸ் சிட்டியில் பிரமாண்ட செட் அமைப்புகளுடன் நடைபெற்று வருகிறது .

விஷாலுக்கும் ஆர்யாவுக்கும் இடையே நடக்கும் சண்டைக் காட்சிகள் டூப் இல்லாமலால் எடுக்கப்பட்டு வந்த நிலையில் படப்பிடிப்பின் போது ஆர்யாவிற்கு கையில் அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பெற்று மீண்டும் இன்று படப்பிடிப்பில் ஆர்யா கலந்து கொண்டுள்ளார்.

அரிமா நம்பி’, இருமுகன்’, நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார்.

மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் S வினோத் குமார் தயாரிக்கிறார் . கதாநாயகியாக மிர்னாலினி ரவி நடிக்கிறார். தமன் இசையமைக்க RD ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார்.

சண்டைக்காட்சிகளை ரவிவர்மா கவனித்து வருகிறார்.