Aruvam Movie Review : Plus, Minus and Rating Points is Here.! | Sidharth | Catherine Therasa | Adukalam Naren | Aruvam Tamil Movie Review
சாய் சேகர் இயக்கத்தில் ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் சித்தார்த், கேத்ரின் தெரசா, சதிஷ், ஆடுகளம் நரேன், கபீர் சிங், மனோபாலா, மயில் சாமி, ஸ்டண்ட் சில்வா மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள திரைப்படம் அருவம்.

Aruvam Movie Review : உலகம் முழுவதும் இன்று வெளியாகியுள்ள இந்த திரைப்படத்தின் விமர்சனத்தை இப்போது பார்க்கலாம் வாங்க.

படத்தின் கதைக்களம் :

கலப்படம் இல்லாத உணவு என் கனவு என்ற நோக்கத்துடன் உணவு பாதுகாப்பு துறையில் திறமையாக பணி புரிந்து வருபவர் சித்தார்த். அப்பா, அம்மா என யாரும் இல்லாத இவருக்கு இவரை போலவே சமூக சிந்தனையுள்ள கேத்ரின் தெரசா மீது காதல் ஏற்படுகிறது.

இதற்கிடையில் சித்தார்த் அரசியல் செல்வாக்குகளை பயன்படுத்தி டாப் பிராண்ட் என சொல்லப்படும் பல உணவு பொருள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு சீல் வைக்கிறார். இதனால் அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து சித்தார்த்தை கொண்டு விடுகின்றனர்.

அதன் பின்னர் சித்தார்த் தன்னுடைய காதலியான கேத்ரின் தெரசாவின் உடலுக்குள் புகுந்து இவர்களை எப்படி வேட்டையாடுகிறார். கலப்படம் இல்லாத உணவு என் கனவு என்ற அவருடைய நோக்கம் நிறைவேறியதா இல்லையா? என்பது தான் இப்படத்தின் கதைக்களம்.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

சித்தார்த், கேத்ரின் தெரசா என இருவருக்கும் இப்படத்தின் சமமான அளவு பங்கு உள்ளது. இருவரும் அவரின் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்து முடித்துள்ளனர்.

ஆடுகள் நரேன் பாசமிக்க அப்பாவாக நம்மை மிரள வைத்துள்ளார். கபீர் சிங் வில்லன் வேடத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார். மற்ற அனைவரும் அவர்களின் கதாபாத்திரங்களை திறம்பட செய்துள்ளனர்.

தொழில்நுட்பம் :

இசை :

எஸ். தமனின் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. சில இடங்களில் காதையும் கிழிக்கிறது. பாடல்கள் சுமார் ரகம்.

ஒளிப்பதிவு & எடிட்டிங் :

ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவு சிறப்பு. பிரவீன் கே.எல்-ன் எடிட்டிங் கச்சிதம்.

இயக்கம் :

சாய் சேகர் சமுதாயத்திற்கு தேவையான ஒரு கருவை கொண்டு இந்த படத்தை கொண்டு சென்றுள்ளார். திரைக்கதையில் மட்டும் இன்னும் கொஞ்சம் மாற்றங்களை செய்திருக்கலாம், மற்றபடி அவருடைய பணியை சிறப்பாக செய்துள்ளார்.

தம்ப்ஸ் அப் :

1. படத்தின் கதை
2. சித்தார்த், கேத்ரின் தெரசாவின் நடிப்பு
3. இசை
4. ஆக்ஷன்

தம்ப்ஸ் டவுன் :

1. டப்பிங் செட்டாகாதது
2. சதீஸ் இருந்தும் பெரிய அளவில் காமெடி இல்லை
3. வழக்கமான லாஜிக்கல் தவறுகள்.

REVIEW OVERVIEW
அருவம் விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
aruvam-movie-reviewமொத்தத்தில் அருவம் அனைவரும் பார்க்க வேண்டிய படம் தான்.