Aruvaa
சூர்யா, ஹரி படமான அருவா ஹீரோயின் நான் தான் என பிரபல நடிகை ஒருவர் கூறியுள்ளார்.

Aruva Movie Heroine Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப்போற்று படத்தில் நடித்து முடித்துள்ளார்.

மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் என்ற படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்க அந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது.

ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய முடிவு செய்து இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவால் படம் தொடங்காமலேயே இருந்து வருகிறது.

இந்த படத்தின் நாயகி யாராக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் நடிகை ராசி கண்ணா இதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளியாகும் எனவும் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.

சூர்யாவுக்கு ஜோடியாக ராசி கண்ணா நடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.