விவேக் நினைவாக பிரபல நடிகர், நடிகை செய்த செயல் குறித்த புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

Arun Vijay Respect to Vijay : தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் நடிகர் விவேக். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவருடைய மறைவு தமிழ் சினிமாவிற்கும் சமூகத்திற்கும் பேரிழப்பு என பலரும் கூறி வருகின்றனர்.

இதனையடுத்து பலரும் விவேக் நினைவாக மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். ரசிகர்களை தொடர்ந்து நடிகர் நகுல் மரக்கன்று வைத்து அதற்கு பெயரையும் சூட்டினார்.

அவரை தொடர்ந்து நடிகர் அருண் விஜய், நடிகை ஆத்மீகா ஆகியோர் மரக்கன்றுகளை வைத்து விவேக்கை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

இவர்கள் வெளியிட்டுள்ள புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.