Arun Vijay Explain About Thalapathy 65

அதெல்லாம் உண்மை இல்லை என தளபதி 65 குறித்து வெளியான தகவல் குறித்து விளக்கமளித்துள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.

Arun Vijay Explain About Thalapathy 65 : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அடுத்ததாக மாஸ்டர் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 65 படத்தில் நடிக்க உள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளது. இந்த படத்தில் தளபதி விஜய்க்கு வில்லனாக அருண் விஜய் நடிக்க உள்ளார் என தகவல் பரவியது.

இதனால் மகிழ்ச்சி அடைந்த ரசிகர்கள் விஜய், அருண் விஜய் கூட்டணியை பார்க்க ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் தளபதி 65 படத்தில் நான் நடிப்பதாக வெளியான தகவல் உண்மையல்ல வெறும் வதந்திதான் என விளக்கமளித்துள்ளார் அருண் விஜய்.

இதனால் ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். அருண் விஜய் நடிப்பில் அடுத்ததாக அக்னிச் சிறகுகள், பாக்ஸர் மற்றும் சினம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.