அருண் விஜய்யின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடையே லைக்குகளைக் குவித்து வருகிறது.

Arun Vijay Childhood Photo : தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகனாக இருந்தாலும் திரையுலகில் தனக்கென ஒரு இடம் பிடிக்க பல வருடங்களாக போராடி வந்தார். பின்னர் தல அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரை படத்தில் அவருக்கு வில்லனாக நடித்து திரையுலகில் தனியிடம் பிடித்தார்.

இந்த படத்தினை தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாக தேர்ந்தெடுத்து ஹீரோவாக நடித்து வருகிறார். சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஸ்மார்ட்டான சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது லைக்குகளை அள்ளி குவித்து வருகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.