Arumugasamy Commission
Arumugasamy Commission

Arumugasamy Commission – சென்னை:ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை முடியும் தருவாயில் உள்ளது என்று ஆறுமுகசாமி ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அப்போலோ மருத்துவமனை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டிருந்தது.

அதில் ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதற்கான சூழ்நிலை, வழங்கப்பட்ட சிகிச்சை மற்றும் அவரின் மரணத்திற்கான காரணம் ஆகியவற்றை கண்டறிய ஆணையம் அமைக்கப்பட்டு, ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக ஆணையம் விசாரிக்கிறது.

அதில் அப்போலோ அளித்த சிகிச்சை தொடர்பாக விசாரணை நடத்த தன்னிச்சையாக செயல்படக்கூடிய மருத்துவர்களைக் கொண்ட மருத்துவக் குழுவை அமைக்க வேண்டும்.

அதுவரை சிகிச்சை தொடர்பாக விசாரிக்க ஆணையத்திற்குத் தடை விதிக்க வேண்டும் என்கிற கோரிக்கையுடன் வழக்கு தொடரப்பட்டது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆறுமுகசாமி ஆணையம் தரப்பானது, ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை முடியும் தருவாயில் உள்ளதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அந்த பதில் மனுவில்: ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆணையத்தின் விசாரணையை தடுக்க வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி முதல் டிசம்பர் 5 வரை அப்போலோ மருத்துவமனையில் நடைபெற்ற அனைத்தையும் விசாரிக்கும் அதிகாரம் எங்கள் ஆணையத்துக்கு இருக்கிறது.

மேலும் நியாயமான முறையில் விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை வரும் 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.