சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு ஓராண்டு காலம் சிறை தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது சென்னை சிறப்பு நீதிமன்றம்.

Arrest Warrant to Sarathkumar : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சரத்குமார். அவருடைய மனைவி ராதிகாவும் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர்கள் இருவரும் இணைந்து மக்கள் நீதி மையம் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்துள்ளனர். இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் செக் மோசடி வழக்கில் 1 வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வங்கி கடனை செலுத்த இவர்கள் அனுப்பிய 7 காசோலைகள் பணம் இல்லை என திரும்பி வந்ததால் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது.