இயக்குனர் ஷங்கர்க்கு Arrest Warrant - அதிர்ச்சியில் திரையுலகம் | Rajinikanth | Enthiran Issue

Arrest Warant to Shankar : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர்.இவர் எஸ் பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். மேலும் ஷங்கர் படம் என்றாலே பிரம்மாண்டத்திற்கு குறைவிருக்காது.

இவர் காதலன், இந்தியன், முதல்வன், எந்திரன், நண்பன், போன்ற திரைப்படங்களை முன்னணி நடிகர்களுடன் இணைந்து இயக்கியுள்ளார்.

அவர் இயக்கத்தில் வெளியான படங்களில் ஒன்று தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “எந்திரன்”. இந்தக் கதை பிரபல எழுத்தாளரான தமிழ் நாடன் எழுதிய கதையாக வெளிவந்தது.

இந்த நிலையில் எந்திரன் படம் திருட்டு கதை என்று கூறி எழும்பூர் நீதிமன்றம் இயக்குனர் ஷங்கருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.