bigil
விஜய் நடித்துள்ள பிகில் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் டிவிட் செய்துள்ளார்.

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்தை அட்லி இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், பிகில் இசை வெளியீட்டு விழாவில் விஜய் கூறிய சில கருத்துகள் ஆளும் கட்சியினருக்கு கோபத்தை ஏற்படுத்தியது.

அதோடு, பிகில் திரைப்படம் தணிக்கை சான்றிதழை பெறாமல் இருந்தது. எனவே, அப்படத்தை வெளியிட சில தடைகள் வர வாய்ப்பிருப்பதாக செய்திகள் வெளியானது.

ஆனால், பிகில் படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழை அளித்துவிட்டது. எனவே, கூறிய படி எந்த சிக்கலும் இல்லாமல் தீபாவளி அன்று பிகில் திரைப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தீபாவளியான அக்டோபர் 27ம் தேதி வெளியாகிறதா அல்லது அதற்கு முன்பே அக் 25ம் தேதி வெள்ளிக்கிழமை வெளியாகிறதா என்பது தெரியாமல் இருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ பிகில் சென்சார் பணிகள் முடிந்துவிட்டன. விரைவில் வெளியீட்டு தேதியை அறிவிப்போம்.

உங்கள் அனைவரின் அன்பு மற்றும் ஆதரவிற்கு நன்றி. பிகில் டிரெய்லர் 2 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது’ என பதிவிட்டுள்ளார். இதை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.