Archana First Magazine Photoshoot

சின்னத்திரையில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அர்ச்சனா தனது ஆரம்பகால சினிமாவின் அட்டை படத்தை பகிர்ந்துள்ளார்.

Archana First Magazine Photoshoot : பிரபல தொகுப்பாளினியாக மக்கள் மனதில் இடம் பெற்ற அர்ச்சனா. சரிகமப சீனியர்ஸ், நம்ம வீட்டு கல்யாணம், அதிர்ஷ்ட லட்சுமி, காமெடி டைம் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். ஜீ தமிழில் தன் மகளுடன் இணைந்து சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக சென்று விளையாடினார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்பு விஜய் தொலைக்காட்சியில் காதலே காதலே என்னும் புத்தம் புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மேலும் அர்ச்சனா பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு குடும்பத்தை சம்பாதித்து விட்டார். தனது தங்கை சீமந்தம் சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில் பிக் பாஸ் பிரபலங்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக‌ வலைத்தளத்தில் பரவி வருகிறது. இந்த நிலையில் தற்போது தனது ஆரம்பகால சினிமாவில் எடுத்த அட்டை படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து தனது சினிமா அனுபவத்தினை நினைவுக் கூறுகிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.