Archana & Co Vs Nisha

நிஷாவுக்கு குழி பறிக்கும் வேலையில் அர்ச்சனா & கோ டீம் இறங்கியுள்ளது ரசிகர்களை விமர்சனம் செய்ய வைத்துள்ளது.

Archana & Co Vs Nisha : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை 5 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வாரம் ஆறாவது எவிக்ஷன் நடைபெற உள்ளது. நிகழ்ச்சி 60 நாளை முடிவு செய்து உள்ளது. இதனால் டைட்டில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு போட்டியாளர்கள் மத்தியில் எழ தொடங்கியுள்ளது.

போட்டியாளர்களின் எப்படியாவது டைட்டிலை வென்றே தீரவேண்டும் என ஆளாளுக்கு ஒரு உத்தியை கையில் எடுக்க தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் இதுவரை பிரியாமல் நகையும் சதையுமாக இருந்து வந்த அர்ச்சனா அண்ட் கோ தன்னுடைய கூட்டத்திலிருந்த நிஷாவை பற்றி புரளி பேசத் தொடங்கி உள்ளது.

அதாவது நிஷாவுக்கு புரியுதா? இல்லையா? எல்லா இடத்திலுமே காமெடி சென்ஸ் வேலைக்காகாது என அர்ச்சனா கூறுகிறார். அதற்கு அர்ச்சனா அண்ட் கோ டீமில் உள்ள சோம் ரமேஷ் மற்றும் பெரிய ஆகியோர் ஒத்து ஊதுகின்றனர்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் பிக் பாஸ் டைட்டிலுக்காக இப்படிக் கூட இருந்தவர்களுக்கு குழி பறிக்க தொடங்கிட்டீங்களே என விமர்சனம் செய்ய தொடங்கியுள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.