Archana Closed Her Account in Twitter

நெட்டிசன்கள் விடாமல் திட்டி தீர்த்து விமர்சனம் செய்து வந்ததால் ட்விட்டரில் இருந்தே ஓட்டம் பிடித்துள்ளார் பிக்பாஸ் பிரபலம் ஒருவர்.

Archana Closed Her Account in Twitter : தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் இந்த வாரம் அனிதா சம்பத் வெளியேற்றப்பட்டார். அவருக்கு முன்னதாக கடந்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டிலிருந்து அர்ச்சனா வெளியேறினார்.

பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற அர்ச்சனா தமக்கிருந்த பெயரையும் மொத்தமாக டேமேஜ் செய்து கொண்டார். அவரை நெட்டிசன்கள் தொடர்ந்து சமூக வலைதளங்களில் விடாமல் விமர்சனம் செய்து வந்தனர்.

இதனால் கடுப்பான அர்ச்சனா எனக்கு ஹேட்டர்கள் அதிகமாக உள்ளனர். நான் ட்விட்டரிலிருந்து வெளியேறுகிறேன். இதை விட பலமாக முன்னேறுவேன்.

நீங்கள் வெறுப்பதற்கு வேறு யாரையாவது தேடுங்கள் என தெரிவித்துவிட்டு குட்பாய் ட்விட்டர் என பதிவிட்டுள்ளார்.

ரசிகர்கள் விடாமல் விமர்சனம் செய்து வந்ததால் அர்ச்சனா ட்விட்டரில் இருந்து வெளியேறி இருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.