Aranthangi Nisha Slim Photos

அறந்தாங்கி நிஷாவின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

Aranthangi Nisha Slim Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் நிகழ்ச்சிகளின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. காமெடி, பட்டிமன்ற பேச்சு என பல திறமைகளைக் கொண்டவர்.

சின்னத்திரை மட்டுமல்லாமல் வெள்ளித்திரையில் மாரி 2 உள்ளிட்ட திரைப் படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும் உலக நாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது சீசனில் பங்கேற்றார். தற்போது மீண்டும் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்த நிலையில் இதுவரை குண்டாக இருந்து வந்த அறந்தாங்கி நிஷா திடீரென தன்னுடைய உடல் எடையை குறைத்து ஒல்லியாக மாறியுள்ளார். இவர் ஒல்லி ஆகியுள்ள புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.