அரண்மனை 3 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

Aranmanai3 First Look Release : தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனராக வலம் வருபவர் சுந்தர் சி. இவரது இயக்கத்தில் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் அரண்மனை. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகமும் வெளியாகி வெற்றி பெற்றது.

இதனையடுத்து தற்போது அரண்மனை3 உருவாகி வருகிறது. இந்த படத்தில் ஆர்யா, ராசிகன்னா மற்றும் பல நடிகர் நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தன.

இந்த நிலையில் நாளை காலை 11 மணிக்கு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.