எட்டு வருட சண்டையை மறந்து மீண்டும் முன்னணி நடிகருடன் முருகதாஸ் கைகோர்க்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

AR Murugadoss Movie With Surya : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் ஏ ஆர் முருகதாஸ். இவரது இயக்கத்தில் இறுதியாக வெளியான திரைப்படம் தர்பார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு முன்னதாக இவர் விஜய்யை வைத்து இயக்கிய சர்க்கார் திரைப்படமும் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. தொடர்ந்து சறுக்கத்தை சந்தித்துவரும் முருகதாஸ் அடுத்த ஹீரோ கிடைக்காமல் அல்லாடி வருகிறார்.

மேலும் இவர் சிவகார்த்திகேயனை வைத்து படத்தை இயக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் அதுவும் இல்லை என ஆகி விட்டது. மேலும் இவர் டிஸ்னி பிளஸ் ஹார்ட் ஸ்டாருக்கு ஒரு அனிமேஷன் திரைப்படத்தினை இயக்கி வருகிறார் என கூறப்படுகிறது.

இந்த படத்தினை தொடர்ந்து கிட்டத்தட்ட 8 வருடமாக கருத்து வேறுபாடு காரணமாக சூர்யாவை இயக்காமல் இருந்து வரும் முருகதாஸ் மீண்டும் அவரோடு இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கு முன்னதாக முருகதாஸ் சூர்யாவை வைத்து கஜினி, ஏழாம் அறிவு என இரண்டு திரைப்படங்களை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.