Appu kutty Family Situation in Corona

வாழ்க்கையை நடத்தவே ரொம்ப கஷ்டமா இருக்கு என உதவியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் அஜித்தின் வீரம் பட நடிகர்.

Appu kutty Family Situation in Corona : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் தல அஜித். இவரது நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் வீரம். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர் அப்புகுட்டி. இவர் ஏற்கனவே தமிழில் குள்ளநரிக்கூட்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

தற்போது கிடைக்கும் சில வாய்ப்புகளில் நடித்து வருகிறார். சாதாரண நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இவர் சென்னையில் சாலிகிராமத்தில் வீடு வாடகைக்கு எடுத்து வாழ்ந்து வந்தார். தற்போது கொரானா வைரஸ் பிரச்சனையால் வருமானம் இல்லாமல் புறநகர் பகுதியான கோவூருக்கு மாறியுள்ளார்.

அன்றாடம் உழைத்தால் சோறு என்ற கட்டத்தில் வாழ்ந்து வரும் அப்புக்குட்டி தற்போது வாய்ப்புகள் இல்லாமல் வருமானம் இல்லாமல் குடும்பத்தை எப்படி நடத்துவது என தெரியாமல் அல்லாடி வருகிறார். தன்னைப் போல பல சிறு சிறு நடிகர்கள் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார் அப்புகுட்டி.

திரையுலகைச் சார்ந்தவர்கள் தனக்கு ஏதாவது உதவி செய்தால் தன்னுடைய குடும்பத்தை கவனிக்க அது உதவியாக இருக்கும் என உதவியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார் அப்புகுட்டி. தல அஜித்துடன் இணைந்து நடித்தவர் என்பதால் அஜித் இவருக்கு உதவி செய்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.