Anushka Vs Kangana Renavath
அனுஷ்கா இப்படித்தான் உடல் எடையைக் கூட்டி பின்னர் குறைக்க கஷ்டப்படும்போது இவர் இப்படி செய்வது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Anushka Vs Gangana : தமிழில் தற்போது பயோபிக் படங்கள்தான் டிரெண்ட். அந்தவகையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையை மட்டுமே மூன்று பேர் படமாக்கி வருகிறார்கள்.

இதில் ஒரு படத்தை விஜய் இயக்குகிறார். தலைவி என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார்.

இதற்காக இவருக்கு இந்தியாவில் இதுவரை எந்த நடிகைக்கும் பேசப்படாத சம்பளம் பேசப்பட்டுள்ளது.

தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி இந்த படத்தில் ஜெயலலிதாவாக நடிப்பதற்காக கிட்டத்தட்ட ஒரு மாத காலம் வரை ஹோம் வர்க் செய்ய கங்கனா திட்டமிட்டுள்ளாராம்.

இந்த காலக்கட்டத்தில் வேறெந்த படத்திலும் நடிக்காமல் வெளியில் கூட தலைக்காட்டாமல் இருக்க கங்கனா முடிவு செய்துள்ளாராம்.

மேலும் ஜெயலலிதா அளவு உடல் எடையைக் கூட்டவும் அவர் திட்டமிட்டுள்ளாராம். ஏற்கனவே அனுஷ்கா இப்படித்தான் உடல் எடையைக் கூட்டி பின்னர் குறைக்க கஷ்டப்படும்போது இவர் இப்படி செய்வது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.