Anushka Sharma Fitness in Pregnancy Period

வயிற்றில் குழந்தையை வைத்துக்கொண்டு தலைகீழாக நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் விராட் கோலி மனைவி அனுஷ்கா ஷர்மா.

Anushka Sharma Fitness in Pregnancy Period : பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா ஷர்மா. இவர் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது அனுஷ்கா ஷர்மா நிறைமாத கர்ப்பிணியாக இருந்து வருகிறார். ஜனவரி மாதத்தில் இவருக்கு பிரசவம் நடைபெறும் என கூறப்பட்டு வருகிறது.

இப்படியான நிலையில் தன்னுடைய கணவர் விராட் கோலியின் உதவியுடன் வயிற்றில் குழந்தையை வைத்துக்கொண்டு தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்துள்ளார்.

இந்தப் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனுஷ்கா சர்மா ஷேர் செய்துள்ளார். புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குழந்தையை வைத்துக்கொண்டு செய்கிற வேலையா இது என அதிர்ச்சி அடைந்துள்ளனர்.