அஜித்துடன் மீண்டும் இணைந்து செம ஹிட்டு கொடுப்பேன் என வெறித்தனமாக உறுதியளித்துள்ளார் பிரபல நடிகையான அனுஷ்கா.

Anushka Comment About Join With Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவர் தற்போது இயக்குனர் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தை தொடர்ந்து சூரரைப் போற்று படத்தின் இயக்குனரான சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாக உள்ள பக்கா ஆக்ஷன் திரைப்படத்தில் நடிக்க உள்ளார்.

இந்த படத்தில் நாயகியாக நடிக்க சாயிஷா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, அனுஷ்கா உள்ளிட்ட நடிகைகளின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. இவர்களில் அஜித்துடன் ஜோடி சேரப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நேற்று அனுஷ்கா நடிப்பில் நிசப்தம் என்ற திரைப்படம் வெளியாக இருந்த நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தல அஜித்துடன் நான் என்னை அறிந்தால் திரைப்படத்தில் இணைந்து நடித்து இருந்தேன். அந்த படம் செம ஹிட்.

அதேபோல் மீண்டும் ஒருமுறை அஜித்துடன் இணைந்து நடிப்பேன். இந்த படத்திலும் ஹிட் கொடுப்பேன் என அதிரடியாக பேசியுள்ளார் அனுஷ்கா.

தல அஜித், அனுஷ்கா கூட்டணிக்காக பெரும்பாலான ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில் அனுஷ்கா இவ்வாறு கூறியது ரசிகர்களை மகிழ்ச்சி ஆக்கியுள்ளது. நாங்களும் உங்க கூட்டணிக்காக காத்துக் கொண்டிருக்கிறோம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.