மகள் நடிக்கும் அழகை மேடையில் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துள்ளார் தல அஜித்.
Anoushka Ajith Acting in Stage : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. ஒட்டுமொத்த அஜித் ரசிகர்கள் தற்போது இப்படத்திற்காக தான் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த படத்தின் அப்டேட் வராதா என்ற ஏக்கத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பள்ளி நிகழ்ச்சியில் தன்னுடைய மகள் அனோஷ்கா வேடமிட்டு நடிப்பதை ஒரு ஓரத்தில் நின்று சாதாரண தந்தையாக ரசித்துள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர்.