Annathe Shooting Update

அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்க இருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

Annathe Shooting Update : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் தற்போது அண்ணாத்த இந்தத் திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் கொரானா வைரஸ் தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இப்படியான நிலையில் தற்போது மீண்டும் வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாக சிறுத்தை சிவா வீடியோ ஒன்றின் மூலமாக தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதோ பாருங்க

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்இன்று தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருவதால் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையாக இந்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.