Annathae Shooting Update

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அண்ணாத்த திரைப்படம் ஆறு மாதங்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Annathae Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அண்ணாத்த திரைப்படம் வெளியாக உள்ளது.

படப்பிடிப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.அதில் நான்கு பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

இருப்பினும் உடலில் ஏற்பட்ட ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு குணமாகி வீடு திரும்பினார்.

இதனையடுத்து அண்ணாத்த திரைப்பட படப்பிடிப்புகள் பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில் இன்னும் தள்ளிப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் முடிந்த பின் அண்ணாத்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கும் என கூறப்படுகிறது.

இன்னும் ஆறு மாதங்களுக்கு படப்பிடிப்பு தள்ளி போவதால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.