Annathae Shooting Starts Again in Hyderabad

கொரானா வைரஸ் தொற்று படு தீவிரமாக பரவி வரும் இந்த நிலையில் அண்ணாத்த ஷூட்டிங்கிற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றுள்ளார்.

Annathae Shooting Starts Again in Hyderabad : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். முருகதாஸ் இயக்கத்தில் இவரது நடிப்பில் தர்பார் என்ற திரைப்படம் வெளியாகியதை தொடர்ந்து அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் நடைபெற்று வந்த நிலையில் படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து படப்பிடிப்புகள் முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.

இப்படியான நிலையில் தற்போது மீண்டும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கியுள்ளன. இந்த படத்தின் ஷூட்டிங்கிற்காக ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றுள்ளார். தற்போது மீண்டும் வைரஸ் தொற்று தீவிரமாக பரவி தொடங்கியுள்ள நிலையில் அண்ணாத்த ஷூட்டிங் தொடங்கியிருப்பது ரசிகர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.