Annathae Movie Update

ரஜினியின் அரசியல் என்ட்ரியால் அண்ணாத்த படத்தில் அதிரடியான சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Annathae Movie Update : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். பல வருடங்களாக அரசியலுக்கு வருவேன் காலம் பதில் சொல்லும் என கூறி வந்த ரஜினிகாந்த் கடந்த வாரம் நான் அரசியலுக்கு வருவது உறுதி வரும் டிசம்பர் 31-ஆம் தேதி அறிவிப்பு வெளியாகும் ஜனவரியில் கட்சி தொடங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

இந்த அறிவிப்பு வெளியான அடுத்த நாளே கட்சியின் மாவட்டச் செயலாளர்களை நியமித்தார். மேலும் இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

ரஜினிகாந்தின் அரசியல் வருகை காரணமாக அண்ணாத்த திரைப்படத்தில் காரசாரமான அரசியல் டயலாக்குகளை உருவாக்குமாறு கூறியுள்ளார்.

இதனால் அண்ணாத்த திரைப்படம் வெறும் குடும்ப கதையாக இல்லாமல் அரசியல் பேசும் படமாகவும் வெளியாக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். படக்குழு இன்னும் இது பற்றி தெளிவாக எதையும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.