Annathae Movie Shooting Update

அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் மீண்டும் தொடங்க இருப்பதாக அதிரடி தகவல் வெளியாகியுள்ளது.

Annathae Movie Shooting Update : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் அண்ணாத்த.

இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ் என பலர் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில் படக்குழு 4 பேருக்கு கொரானா உறுதியானதால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.

ரஜினிகாந்த் தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்த நிலையில் மீண்டும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்தில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.