Annaatthe Movie Leaked Story
Annaatthe Movie Leaked Story

அண்ணாத்த படத்தின் முழு ஸ்டோரி இது தான் என தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.

Annaatthe Movie Leaked Story : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இமான் இசை அமைக்கிறார். குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, சூரி, சதீஷ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு தங்கையாக நடிப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வைரலாகி இருந்தன.

இந்த நிலையில் தற்போது இதுதான் அண்ணாத்த படத்தின் கதை என புதிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் தீயாக பரவ தொடங்கியுள்ளது.

அதாவது குஷ்புவும் மீனாவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் முறை பெண்கள் இருவரும் ரஜினியை மணக்க ஆசைப்படுகின்றனர். ஆனால் ரஜினி ஒருவரை கட்டிக்கொண்டால் இன்னொருவருக்கு மனவருத்தம் என இருவரையும் நிராகரித்து விட்டு வேறொரு பெண்ணை மணந்து கொள்கிறார்.

காக்க காக்க சுற்றுச்சூழல் காக்க.. ஒத்த ட்விட்டில் டுவிட்டரை அதிர வைத்த சூர்யா – வைரலாகும் பதிவு!

இந்த தம்பதியருக்கு பிறக்கும் மகள் தான் கீர்த்தி சுரேஷ். ரஜினியை மணந்துகொள்ள முடியாமல் போன குஷ்புவும் மீனாவும் கீர்த்தி சுரேஷையாவது தன் மருமகளாக்க வேண்டுமென போராடுவது தான் இரண்டாம் பாதி. இறுதியில் யார் ஜெயிக்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை என வைரலாகும் தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் குஷ்புவும் மீனாவும் ரஜினிக்கு முறை பெண்கள் என்றால் கீர்த்தி சுரேஷிற்கு சித்தி/பெரியம்மா முறை அல்லவா வரும். அப்படி இருக்கையில் எப்படி அவரை மருமகளாக முயற்சிக்க முடியும்?

துளியும் லாஜிக் இல்லை என்பதால் இந்த கதை அண்ணாத்த படத்தின் கதையாக இருக்க நிச்சயம் வாய்ப்பில்லை என்பது தற்போது உறுதியாகியுள்ளது.

இருப்பினும் இது தான் கதை என சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டு தான் இருக்கிறது.