பிக்பாஸ் ஆரியின் வெற்றி குறித்து அனிதா சம்பத் பதிவிட்ட அவருக்கு ரசிகர்கள் ஆறுதல் கூறி வருகின்றனர்.
Anitha Sampath Wishes to Aari : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி நான்காவது சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
கடந்த வாரம் முடிவடைந்த இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக நடிகர் ஆரி தேர்வு செய்யப்பட்டார். ஆரி வெற்றியாளர் என அறிவிக்கப்பட்டதும் சனம் ஷெட்டி மற்றும் அனிதா சம்பத் ஆகிய இருவர் மட்டுமே எழுந்து நின்று கைதட்டி உற்சாகமாக கொண்டாடினர்.
இந்த நிலையில் அனிதா சம்பத் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கங்கிராஜுலேசன் ஆரி ப்ரோ, தகுதியான வெற்றியாளர் என பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் ஆரியை மட்டும் நீங்கள் பகைத்துக் கொள்ளாமல் இருந்திருந்தால் இந்நேரம் பைனலிஸ்ட்டாக ரம்யா பாண்டியன் இடத்தில் இருந்து இருப்பீர்கள் என தெரிவித்து வருகின்றனர்.