Anitha Sampath Reply to Fan

தொடர்ந்து அசிங்கமாக பேசி வந்த பெண்ணின் புகைப்படத்தை வெளியிட்டு அனிதா சம்பத் பதிலளித்துள்ளார்.

Anitha Sampath Reply to Fan : தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இது நிகழ்ச்சியை நான்காவது சீசன் இரு வாரங்களுக்கு முன்னர் நிறைவுபெற்றது.

பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களாக சென்றவர்கள் மக்கள் மத்தியில் ஆதரவு எதிர்ப்பு என கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளனர்.

அதிலும் குறிப்பாக அர்ச்சனா, ரியோ, நிஷா, ஜித்தன் ரமேஷ், ரம்யா பாண்டியன், அனிதா உள்ளிட்டோருக்கு எக்கச்சக்கமான ஹேட்டர்ஸ் உருவாகினர்.

இவர்களைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் பலர் தாக்கிப் பேசி வந்தனர். அந்த வரிசையில் பெண் ஒருவர் தொடர்ந்து அனிதா சம்பத்தை தரக்குறைவாக பேசி வந்துள்ளார்.

இதனால் கடுப்பான அனிதா சம்பத் அந்த பெண்ணின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு ஒரு பெண்ணே பெண்ணை பற்றி அவதூறாக பேசுவது வேதனை அளிக்கிறது.

உன்னுடைய ப்ரொபைல் பிக்சரில் உன் புகைப்படத்தை தைரியமாக வைத்துள்ளாய். இதையும் நீ தைரியமாக எதிர் கொள்வாய் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.