Anitha Fight With Aari

என் அம்மா, அப்பா, ஹஸ்பண்ட் பத்தி பேசாதீங்க ஆரியிடம் சண்டையிட்டு உள்ளார் அனிதா.

Anitha Fight With Aari : தமிழ் சின்னத்திரை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியில் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது ப்ரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் சிவானி ஆரிடம் இந்த வீட்டில் யார் டீ-மோட்டிவேட்டிவ்வா இருக்காங்க என நினைக்கிறீர்கள் என கேள்வி எழுப்புகிறார்.

இதனையடுத்து ஆரி அனிதாவை கூறுகிறார். அவர் ஒரு நாள் பெட்டில் படுத்துக் கொண்டு என் வீட்டில் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என அழுததாக கூறுகிறார்.

இதனால் கடுப்பான அனிதா ஆரி அம்மா அப்பா மற்றும் ஹஸ்பண்ட் பத்தி பேசாதீங்க என கோபத்தோடு சண்டையிடுகிறார்.

இதோ அந்த வீடியோ

ஆரி என்ன பேசுகிறார் என முழுவதாக கேட்காமலேயே அனிதா அவரிடம் சண்டையிட்டது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது.