Anikha in Kappalae Telugu Remake

அனிகா தொடர்ந்து நடத்திய போட்டோ ஷூட்களுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. அதாவது அவர் நாயகியாக படம் ஒன்றில் ஒப்பந்தமாகியுள்ளார்.

Anikha in Kappalae Telugu Remake : தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடித்து வருபவர் அனிகா. இவர் தமிழில் என்னை அறிந்தால் படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தார்.

அதன்பின்னர் சிறுவயது நயன்தாராவாக நானும் ரவுடிதான் படத்தில் நடித்திருந்தார். பின்னர் விசுவாசம் திரைப்படத்தில் அஜித் மற்றும் நயன்தாராவின் மகளாக நடித்தார்.

தற்போது குமரிப்பெண்ணாகி விட்ட அணிகா படங்களில் நாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையில் தொடர்ந்து முழுமூச்சாக விதவிதமான போட்டோக்களை நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அவர் நடத்தி வந்த போட்டோஷூட்டுகளுக்கு தற்போது பலன் கிடைத்துள்ளது. அதாவது மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற கப்பலே திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாயகியாக நடிக்க அனிகா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் தகவல்கள் கிடைத்துள்ளன.

இது கறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெகு விரைவில் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.