Andhaghaaram Movie Review

விக்னேஷ்ராஜன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் வினோத் கிஷன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியாகியுள்ள அந்தகாரம் படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க.

Andhaghaaram Movie Review : இந்தியாவில் பரவி வரும் கொரானா வைரஸ் தொற்று காரணமாக தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த காரணத்தால் OTT இணையதளங்கள் மூலமாக படங்கள் ரிலீசாவது என்பது வழக்கமான ஒன்றாகி வருகிறது.

அந்த வகையில் இயக்குனர் அட்லீயின் தயாரிப்பில் உருவாகியுள்ள அந்தகாரம் படம் நெட்பிளிக்ஸ் இணையதளம் மூலமாக வெளியாகியுள்ளது.

படத்தின் கதைக்களம் :

ஒரு கிரிக்கெட் வீரர் ஒரு நூலகர் மற்றும் ஒரு மருத்துவர் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை கொண்டு ஆக்ஷன் த்ரில்லர் படமாக இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

குறிப்பு : படத்தின் சுவாரஸ்யங்கள் கருதி கதையை விவரிக்கவில்லை.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

அர்ஜுன் தாஸ் இந்த படத்தில் தனித்துவமான நடிப்பை வெளிக்காட்டியுள்ளார். இதுவரை அவருடைய குரலை மட்டுமே போக்கஸ் செய்து ரசித்து வந்த ரசிகர்கள் இந்த படத்திற்கு பிறகு அர்ஜுன் தனது நடிப்பை வியந்து பார்க்க தொடங்குவார்கள் எனலாம். அந்த அளவிற்கு சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார்.

வினோத் கிஷன் அவர்களும் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் படத்தில் ஸ்கோர் செய்துள்ளார். மற்ற நடிகர்களும் தங்களது கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துக் கொடுத்துள்ளனர்.

தொழில்நுட்பம் :

இசை :

ஆக்சன் த்ரில்லர் படங்களுக்கு படத்தின் இசை தான் பெரிய பலம். இதனை நன்கு அறிந்து இசையமைத்து படத்திற்கு பலம் சேர்த்துள்ளது இசையமைப்பாளர் பிரதீப் குமார்.

ஒளிப்பதிவு :

ஏனெனில் ஒளிப்பதிவு காட்சிகளை அழகாக படமாக்கி உயிர் கொடுத்துள்ளது.

எடிட்டிங் :

சத்யராஜ் நடராஜன் படத்தின் சுவாரசியம் கொஞ்சமும் குறையாமல் படத்திற்கு எனவே காட்சிகள் தேவை என்பதை அறிந்து எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இயக்கம் :

அறிமுக இயக்குனரான விக்னேஷ் ராஜன் அந்தகாரம் என்ற படத்தின் மூலமாக அனைவரையும் அதிர வைத்துள்ளார். இந்த அளவிற்கு மிகவும் வித்யாசமான கதை களத்தை கையில் எடுத்து திறம்பட இயக்கியுள்ளார்.

லேண்ட்லைன் போன்களை பயன்படுத்தும் அனைவருக்கும் ஒருவித பயம் ஏற்படும் வகையில் இந்த படத்தை உருவாக்கியுள்ளார்.

தம்ப்ஸ் அப் :

அர்ஜுன் தாஸ், வினோத் கிஷன் ஆகியோரின் நடிப்பு.

வித்தியாசமான கதைக்களம்

அறிமுக இயக்குனரா என யோசிக்க வைக்கும் சிறப்பான இயக்கம்.

தம்ப்ஸ் டவுன் :

பெரிய அளவில் குறைகள் இல்லை.

REVIEW OVERVIEW
அந்தகாரம் படத்தின் விமர்சனம்
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.
andhaghaaram-movie-reviewமொத்தத்தில் அந்தகாரம் திரைப்படம் அர்ஜுன் தாஸ் வினோத் கிஷனுக்கு சிறந்த திரைப்படமாக இருக்கும்.