Ammu Abirami joins Karthi Film : jyothika | It is noteworthy that he has already acted in a film with Karthi | Jackpot Movie | Kollywood | Tamilcinema

 Ammu Abirami joins Karthi Film :

நடிகை அம்மு அபிராமியும் கார்த்தி – ஜோதிகா படத்தில் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகியாக இருந்தவர் ஜோதிகா. திருமணத்திற்கு பிறகு நீண்ட காலம் ஓய்வில் இருந்த ஜோதிகா, 36 வயதினிலே படத்தின் மூலம் அதிரடியாக கம்பேக் கொடுத்தார்.

அஜித்தையும் இழுத்து போட்ட அரசியல் – இப்படி நடக்கும்னு எதிர்பார்க்கவே இல்ல.!

அந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து பல படங்களில் நடித்துவரும் அவர் அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் இவர் அடுத்ததாக நடிக்கும் படத்தை பாபநாசம், 36 வயதினிலே புகழ் ஜீத்து ஜோசப் இயக்கவுள்ளார். இதில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார்.

இப்படத்தில் இவர்கள் இருவரும் சகோதரர்களா நடிப்பதாகவும் ஒரு சம்பவத்தில் இருந்து குடும்பமாக இவர்கள் எப்படி ஒன்றிணைந்து வெளியேறுகிறார்கள் என்பதுதான் இப்படத்தின் மையக்கரு என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம். இப்படத்தில் சத்யராஜ் இவர்களது தந்தையாக நடிக்கிறார்.

இவர்கள் போக தற்போது நடிகை அம்மு அபிராமியும் இப்படத்தில் இணைந்துள்ளார். இவர் ஏற்கனவே கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.